தீக்கதிர்

கடவுளின் அவதாரம் கருணை மனு…!

ஜெய்ப்பூர்; 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே, 16 வயது சிறுமி உள்பட பெண் சீடர்கள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர் சாமியார் ஆசாராம் பாபு. தற்போது, ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது வயோதிகத்தை கருத்தில் கொண்டு, தண்டனையைக் குறைக்குமாறு ராஜஸ்தான் ஆளுநருக்கு கருணை மனு அளித்துள்ளார். ஆசாராம் பாபு, தன்னைக் ‘கடவுளின் அவதாரம்’ என்று கூறிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.