சேலம்,
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு எதிர்வரும் நவம்பர் 18 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக்கும் வகையில் வரவேற்புக் குழு அமைக்கும் கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் கருப்புசாமி தலைமையில் சேலம் சுனில் மைத்ரா நினைவகத்தில் நடைபெற்றது. இதில் வரவேற்புகுழு தலைவராக தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.முருகபெருமாள் மற்றும் 40 பேர் கொண்ட வரவேற்புக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், இம்மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இந்த வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சேரலாதன், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.கே.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: