புதுதில்லி:
‘இந்தியா என்ன செய்தாலும், என்னால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது; என்னிடம் பணமில்லை’ என்று, நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்சி துணிந்திருக்கிறார்.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, போலி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 13 ஆயிரத்து 700 கோடியை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பினார். கூடவே அவருக்கு உடந்தையாக இருந்த உறவினரும்- கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெகுல் சோக்சியும் தலைமறைவானார். நீரவ் மோடி லண்டனில் இருப்பதாக கூறப்படும் நிலையில், மெகுல் சோக்சி ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டில் இருக்கிறார்.இந்நிலையில், மெகுல் சோக்சி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இந்தியாவில் ஏராளமானோர் மோசடி செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்; ஆனால் அவர்களை எல்லாம் பிடிக்க முடியாத இந்திய அரசு என்னை குறி வைக்கிறது; ஏனெனில் நான்தான் அவர்களுக்கு மிகவும் எளிதான இலக்காக தெரிகிறேன் போலும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்திய அரசு, நான் வைத்திருந்த அனைத்தையும் கைப்பற்றி விட்டது; தற்போது கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு என்னிடம் எதுவும் இல்லை; எனது சொத்துகளை விற்பனை செய்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவை அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்” என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: