தீக்கதிர்

உள்ளாட்சி தேர்தல்: செப்.24-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு கெடு…!

சென்னை;
உள்ளாட்சி தேர்தல் குறித்து செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தோல்வியை சந்தித்து விடும் என்ற அச்சத்திலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வரவில்லை என்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டும் அரசு நடத்தாததால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி செப்டம்பர் 24 ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.