தீக்கதிர்

உத்திரபிரதேசத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் தலித் மாணவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை

முசாபர் நகர் :

உத்திரபிரதேச மாநிலம் மண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு மாணவன் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நாட்டிலுள்ள தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது உத்திரபிரதேச மாநிலத்தின் மண்ட்லா கிராமத்தில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் தலித் மாணவன் நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வழியில் மர்ம கும்பல் ஒன்றால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் மாணவனின் உடலை நெடுஞ்சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வந்த வட்டார அலுவலர் ரிஷ்வான் அகமது உறுதி அளித்ததையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் மாணவரை கொன்றவர்களை தேடி வருகின்றனர்.