திருப்பூர்,
வீடற்ற தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள கருவம்பாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் மக்கள் கடும் நெருக்கடியான இடத்தில் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளார்கள். ஆகவே, 3 வது மண்டலத்திற்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அரசிற்கு சொந்தமான இடத்தில் வீடற்ற தலித் மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: