தீக்கதிர்

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் கிஞ்சித்தும் கவலைப்படாத மத்திய அரசு…!

சென்னை;
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை செவ்வாயன்றும் வழக்கம்போல் உயர்ந்துள்ளது. மத்திய அரசோ, பிரதமர் மோடியோ மக்கள் கஷ்டம் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. செவ்வாயன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 14 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 5 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனையாகிறது.

தினமும் பேரிடியாக விழும் விலை உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் ஆனால் மத்திய அரசோ, பிரதமர் மோடியோ மக்கள் கஷ்டம் குறித்து கிஞ்சித்தும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று பொதுமக்களும் தொழிலாளர்களும் கூறுகின்றனர்.