சென்னை:
சென்னை பல்லாவரத்தில் வங்கி அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் 220 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ரெப்கோ வங்கியின் மேலாளராக இருப்பவர் செந்தமிழ் யோகேஸ்வரன். இவரது வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள், வீட்டில் இருந்த செந்தமிழ் மற்றும் அவரது மனைவியை மிரட்டி கத்தி முனையில் தங்க நகைகளை கேட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் சொன்னது போல ஒரு துணியில் அனைத்து நகைகளையும் எடுத்துக் கட்டிய தம்பதி, கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளனர். நகைகளை வாங்கிக் கொண்டு, தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த செல்போன்களையும் பறித்துச் சென்றனர். அதன் பின்னர் அரை மணி நேரம் போராடி தன்னை விடுவித்துக் கொண்ட செந்தமிழ், மனைவியையும் விடுவித்தார். பிறகு கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமூடிக் கொள்ளையர்களையும், அவர்களுக்கு உதவிய வீட்டுப் பணிப் பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: