புதுதில்லி :

தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வேதாந்த குழுமம் தொடந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தி பணிகளை தொடங்க கூடாது எனவும், நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தீர்ப்பாயம் அளித்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விசாரணை செய்ய மாநில பிரதிநிதியே இல்லாமல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு பொறுப்பேற்ற ஆறு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த வழக்கு விசாரணையை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு தடை கோரியிருந்த தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததோடு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை மேற்கொள்ளும் எனவும், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான குழு விசாரணைக்கும் அனுமதி அளித்துள்ளது. குழுவின் ஆய்வு அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆலையை மூடுவது பற்றி குழு அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே ஆலை மூடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.