தீக்கதிர்

வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தீக்குளிப்பு

திருப்பூர்,
திருப்பூரில் வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் ஒருவர் சாலையில் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (18). இவர் திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உணவகத்தில் வருமானம் போதிய அளவில் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும், வேறு வேலை பார்த்துக் கொள்ளுமாறும் உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் விரக்தியும், வேதனையுமடைந்த அருள்பிரகாஷ் குமார்நகர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.