இந்துத்துவா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள விசிக பொதுச்செயலாளர் து.ரவிக்குமார் உள்ளிட்ட 34 பேருக்கும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திங்களன்று (செப்.10) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் வலதுசாரி-சனாதன பயங்கரவாத எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: