பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இடதுசாரி கட்சிகளின் சார்பாக நாடுமுழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னைஅண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஐ(எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.