ஜெய்ப்பூர்;
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் திங்களன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந் நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதமாக குறைத்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை (செப்.10) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தின.
இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதம் குறைப்பதாகவும், இது மாநில மக்களுக்கும் விவசாயி களுக்கும் தேவையான நிவாரணமாக இருக்கும் என்றும் ராவட்சர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.9) நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்தார்.

இதையடுத்து பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 30 சதவீதத்தில்
இருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 22 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையவாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி அறிவித்த நாடு தழுவிய போராட்டம் பொதுமக்கள் ஆதரவை பெற்ற பின்னரே, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.