இராமேஸ்வரம்:
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கரைகளிலேயே நிறுத்திவைக்கப்பட்டன.

கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை கரையிலேயே நிறுத்தி, எதிர்க் கட்சிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தூத்துக்குடி மீனவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் 250க்கும் மேற்பட்ட தங்களது படகுகளை மீன்பிடித்துறைமுகக் கரை
யிலேயே நிறுத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: