திருப்பூர்,
திருப்பூரில் காவல் துறை என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை வீரபாண்டி காவல் துறையினர் ஞாயிறன்று கைது செய்தனர்.

பல்லடம் சாலை டி.கே.டி மில் பகுதில் தனியாக வருபவர்களை வழிமறித்து காவல் துறை என கூறி பணம் பரிப்பதாக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து காவலர்கள் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் , அவர்களை காவல்துறை என்று கூறி கொண்டு பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை கண்ட காவல் துறையினர் மூன்று பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24), முருகானந்தம் (23) மற்றும் பல்லடத்தை சேர்ந்த முரசொலி மாறன் (23) என்பது தெரியவந்தது. மேலும்,திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது வந்தது விசாரனையில் தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடகிருந்த ரூ 3,500 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.