மன்னார்குடி,

பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும், தண்ணீர் இன்றி வாடும் நெல் பயிருக்கு உடனே தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் காங்கிரஸ் தலைவர் கனகவேல் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், மாவட்டக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, திமுக தலைமைக்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாது, ஒன்றிய செயலாளர் கே.தன்ராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் பி.பாலசந்திரன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சிசுந்தரம், விசிக மாநிலக்குழு உறுப்பினர் ரமணி, சிபிஎம் நகரக்குழு செயலாளர் எஸ்.ஆறுமுகம், சிறுபான்மை நலக்குழு தலைவர் ஏ.அஷ்ரப்அலி, நகர ஒன்றிய இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ராமலிங்கம், யு.மார்க்ஸ்,   ஜி.ரெகுபதி, ஜி.தாயுமானவன், எம்.சிராஜுதீன், பி.கலைச்செல்வி உள்ளிட்டு 250 பேர் மறியலில் பங்கேற்றனர்.  அவர்களை மன்னார்குடி காவல் துறையினர் கைது செய்தனர்.

கோட்டூர்,
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் விவசாயத்திற்கு உடனே  தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் கோட்டூரில்  சாலை மறியல் நடைபெற்றது.  மறியலுக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், சிபிஐ ஒன்றியசெயலாளர் கே.மாரிமுத்து, விசிக செயலாளர் மு.முருகையன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எல்.சன்முகவேலு, எஸ்.தங்கராசு, என்.எம்.சண்முகசுந்தரம், விச செயலாளர் ஜே.ஜெயராமன்,  ஆர்.ரெகுபதி  உள்ளிட்டு 300 பேர் மறியலில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.