பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடுதழுவியளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் பெரும்பகுதியான கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ மற்றும் லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பேருந்துகளும் இயங்கவிலை. நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக இயல்பு வாழ்கை முடங்கியது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தன. அதன்படி நாடுமுழுவதும நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் பெரும்பகுதியான கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ மற்றும் லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பேருந்துகளும் இயங்கவிலை. நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக இயல்பு வாழ்கை முடங்கியது.
தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.91 பைசாவிற்கும்.. டீசல் லிட்டருக்கு ரூ.76.98 பைசாவிற்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 89.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்விற்கு அடிப்படை காரணமே மத்திய அரசு வதித்திருக்கும் வரிமேல் வரியே காரணம். விலை உயர்வை காரணமாக வைத்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் வேலையில் மோடி அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதற்கு எதிராகவே இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
முழுஅடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா முழுக்க பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளின் சார்பாக நாடுமுழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் லட்சசக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர்.
தில்லியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாரம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, மற்றும் சிபிஐ(எம்எல்) , எஸ்யுசி(ஐ) , ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
சென்னை, அண்ணாசாலை , தாராபூர் டவர் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஐ(எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதேபோல் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. அலுவலகம், அரசு பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் ஆம்புலன்ஸ், மருத்துவமனை இயங்கியது. அதேபோல் போல் பால், மருந்து ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் எந்த வித அசம்பாவிதமும் இன்று போரட்டம் நிறைவு பெற்றுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.