புதுச்சேரி,
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மக்கள் மீது திணித்துள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

பாஜக தலைமையிலான மத்திய மோடி அரசு வரலாறு காணாத வகையில் பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வால் ஏழை, எளிய மக் கள் மற்றும் வாகன ஓட்டிகள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இடதுசாரிகள் எதிர்க்கட்சிகள் திங்களன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்திருந்தது.

கடைகள் அடைப்பு-பேருந்து நிறுத்தம் :                                                                                        புதுச்சேரி நேருவீதி, காந்திவீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகல்சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங் கள், அங்காடிகள் உள்ள பிரதான சாலைகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. திரையரங்க காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அரசுக்கு சொந்தமான பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. இதேபோல் கிராமப்புற பகுதிகளான வில்லியனூர், பாகூர், திருக்கனூர் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மறியல்:
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி அமைப்புகள் சார்பில் சுப்பையா சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பிறகு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பிரபுராஜ், மற்றும் பிரதேசக்குழு உறுப் பினர்கள் முருகன், சரவணன், நகர செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகரச் செயலாளர் நடராஜன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர்கள் விசுவநாதன், நாரா. கலைநாதன் மற்றும் நிர்வாகிகள் அபிஷேகம், சேதுசெல்வம், தினேஸ் பொன்னையா உள்ளிட்ட ஏராளமானோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். பாகூரில் சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சிபிஐ தொகுதிச் செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் நான்கு முனைசந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மதகடிப்பட்டு, வில்லியனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இடதுசாரிக்கட்சிகளின் தொண்டர் கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.