ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் ஞாயிறன்று இரவு 8 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாகிஸ்தானின் ஜியாரத் பகுதியிலிருந்து அந்நாட்டு ராணுவப் படை, இந்திய ராணுவத்தின் முகாம் உள்ள பிளாக் ராக் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்த்த இந்திய ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நேரம் மோதல் நீடித்தது. இதில் காயமடைந்தவர்கள் குறித்து உடனடித் தகவல்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: