நீலகிரி :

உதகையில் உள்ள அரசு தோட்டக்கலை வளாகத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர் அர்ஜூனன் விவசாயிகளை சந்திப்பதாக கூறிவிட்டு கட்சியின் விழாவை நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் நீலகிரி மாவட்டச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.ஆர் அர்ஜூனன் உதகையில் உள்ள ஸேரிங்கிராஸ் உள்ள அரசு தோட்டக்கலை வளாகத்தில் அக்கட்சியின் புதிய உறுப்பினர்கள் இணையும் விழாவை நடத்தியுள்ளார். விழாவை பொது இடத்தில் நடத்துவதுபோல் தொண்டர்களின் ஆரவாரமும், விசில் அடிப்பதும் என காட்சியளித்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் கூறுகையில், எம்.பி விவசாயிகளை சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்த இடம் கேட்டார். இதற்கு வாய்மொழியாகவே தோட்டக்கலைத்துறை வளாகத்தை பயன்படுத்துமாறு கூறினேன். ஆனால், இவ்வாறு கட்சிக்கூட்டம் நடந்தது பற்றி தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: