திருப்பூர்,
சாமளாபுரம் அருகே தண்ணீரில் மூழ்கி மூன்று வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியில் வசித்து வருபவர் விசைத்தறி தொழிலாளி நாகராஜ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதுடைய ஷிவன்யா ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஞாயிறன்று இரவு பணி முடிந்து திரும்பி வந்த நாகராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தமிழ்செல்வி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை எழுப்பி விசாரித்த போது யாரோ தன்னை தாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதன்பின் குழந்தையை தேடியபோது வீட்டின் உள்ளே நீர் நிரப்பியிருந்த டிரம்மில் குழந்தை மூழ்கி கிடந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை மீட்ட நாகராஜ் ,கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மங்கலம் காவல் துறையினர் நாகராஜ் – தமிழ்செல்வி இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டினுள் இருந்த டிரம்மில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.