விருதுநகர்;
மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்றக் காவல் வரும் செப்.,14 வரை நீட்டிப்பு செய்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவர் நிர்மலாதேவி. இவர் மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்தும் வகையில் செல்போனில் பேசினார். எனவே, கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், திங்கள் கிழமை காலை, போலீசார் மூவரையும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 இல் நீதிபதி திலகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, நீதிபதி, மூவரையும் செப்.,14 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் மூவருக்கும் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: