தீக்கதிர்

நகை பறித்த கொள்ளையர்கள் கைது

திருப்பூர்,
திருப்பூரில் பெண்ணிடம் நகை பறித்த இரு கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம், பொன்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி வசந்தா. இவர்களது மகன் சபரி அருண். இவர் வீரபாண்டி சபரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி அருணை பார்ப்பதற்கு வசந்தா வீரபாண்டி பிஏபி வாய்க்கால் வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரு கொள்ளையர்கள், வசந்தா அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். ஆனால் வசந்தா தாலியை இறுக பிடித்துக் கொண்டதால் 3 பவுனுடன் மட்டும் பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில், வீரபாண்டியில் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், வசந்தாவிடம் நகை பறித்து சென்றவர்கள் என்பது தெரியவந்துது. பிடிபட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்த ராஜசேகர் (25), திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த ஜீவா (25) என்பதும் தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.