தீக்கதிர்

தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 19 பேர் பலி

ஜுபா :

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துகுள்ளானதில் விமான ஓட்டிகள் உள்பட அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகினர்.

நேற்று தெற்கு சூடானின் மத்தியப்பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று அங்கு நிலவிய பனிமூட்டத்தினால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவ்விமானத்தில் பயணம் செய்த விமான ஓட்டிகள் உள்பட 19பேர் பலியாகினர். மேலும், நான்கு பேர் மட்டுமே படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, விபத்து நடந்த மாநில அமைச்சர் அபேல் அகுக் கூறும்போது, ”விமானம் தலைநகர் ஜுபாவிலிருந்து இரோல் நகருக்கு செல்லும்போது, அங்கு நிலவிய பனிமூட்டத்தினால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்”என்றார். மேலும், விமான விபத்து குறித்து விசாரணை நடத்த தெற்கு சூடான் அரசு உத்தரவிட்டுள்ளது.