மும்பை;
சொராபுதீன், அவரது மனைவி மற்றும் நண்பர் ஒருவர் என்கவுண்ட்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
வன்சாரா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் விடுவிக்கப் பட்டதை, மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2005 – 2006 ஆம் ஆண்டுகளில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீவி (நவம்பர் 2005)மற்றும் அவரது கூட்டாளி துள்சிராம் பிரஜாபதி (டிசம்பர் 2006) ஆகியோர் என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு காவல்துறை அதிகாரியான விபுல் அகர்வாலையும் விடுவித்து, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பாதர் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு, விபுல் அகர்வால் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், விசாரணை நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது. பின்னர் விபுல் அகர்வால் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இவர்களை விடுவிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கு குறித்து, கடந்த ஜூலை மாதம் இரண்டு வாரங்களாக தினமும் விசாரணை நடத்திய பின்னர், குஜராத் காவல்துறையின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், என்.கே.அமின் மற்றும் ராஜஸ்தான் காவல்துறை அதி காரிகளான எம்.என்.தினேஷ், தால்பத் சிங் ரத்தோட் ஆகியோர் விடுவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தகுதி இல்லாதது எனக் கூறி நீதிபதி பாதர் தீர்ப்பு வழங்கினார்.

முன்னதாக, தினேஷ், பாண்டியன் மற்றும் வன்சாரா ஆகியோரை விசார ணை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என சொராபுதீனின் சகோதரர் ரூபாபுதீன் தெரிவித்திருந்தார். அமின் மற்றும் ரத்தோட் விடுதலை குறித்தும் எதிர்ப்பு வந்ததால், சிபிஐ வழக்கு பதிந்தது.

இந்த போலி என்கவுண்ட்டரில் குற்றம் சாட்டப்பட்ட மேற்கண்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட 33 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி, ஆகஸ்ட் 2016 மற்றும் செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு களுக்கிடையில், இவ்வழக்கு குஜராத்திலிருந்து மும்பை சிறப்பு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, போலி  என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்
பட்ட 38 பேரில், 14 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா உட்பட 15 பேர் விடுவிக்கப் பட்டனர்.

இவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்தும், குறிப்பாக அமித்ஷா விடுவிக்கபட்டது குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் ஏற்கெனவே வெளியாகி யுள்ளது. அமித்ஷாவை விடுக்க மறுத்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவ மும் குறிப்பிடத்தக்கது.
(பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.