சென்னை:
குட்கா ஊழல் வழக்கில் மாதவராவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மேலாளர்கள், நிர்வாகிகள் என 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனையை தொடர்ந்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத குட்கா ஆலை அதிபர் மாதவராவ், பங்குதாரர்கள்
சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாதவராவுக்குச் சொந்தமான ஜெயம் குழும நிறுவனத்தின் மேலாளர்கள் 4 பேர் மற்றும் நிர்வாகிகளாக உள்ள உறவினர்கள் இருவருக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ அதிகாரிகள், திங்களன்று நுங்கம்பாக்கம் அலு வலகத்திற்கு அவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: