கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிர் பரப்பில் நடப்புப்பருவம் 2018- 19 க்கு 16,000 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. விழுப் புரம் மாவட்டத்தில் மழையின்மை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டு இங்கு பயிரிடப்பட்ட கரும்பில் 80 விழுக்காடு அதாவது சுமார் 13,000 ஏக்கர் காய்ந்து போயுள்ளது. இதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் நட்டம் ஏற்பட்டு பெரும் மனவேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி இம்மாவட்டத்தில் காய்ந்த கரும்பு பகுதிகளை பார்வையிட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் “காய்ந்துபோயுள்ள கரும்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி செப்டம்பர் 10ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும்”என அறிவித்திருந்தார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கடும் வறட்சியால் கரும்பு காய்ந்து நட்டமடைந் துள்ள விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்திட தமிழக அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பயிர் காப்பீடு செய்துள்ளவர்களுக்கு அதற்கான காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வேளாண்துறை, வருவாய்த்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக் கெடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

உடனடியாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விவசாய சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 10 ஊழியர்களை நியமித்து பிற்பகல் வரை போராட் டத்தில் பங்கேற்ற சுமார் 2000 கரும்பு விவசாயிகளிடம் மனுக்களை பெற்றனர். இப்போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநில பொருளாளர் எம்.சின்னப்பா, ஆலைசங்கத் தலைவர் குருநாதன், செயலாளர் முகமதுஅலி, மாநிலக்குழு உறுப்பினர்கள் நாராயணப்பிள்ளை, சத்தியமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: