திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 43 ஆண்டுகளுக்கு பிறகு, ஆசிரியர்- மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1954 ஆம் ஆண்டு, காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1957 ஆம் ஆண்டில் இந்த பள்ளி துவங்கப்பட்டது. கடந்த 1975ஆம் ஆண்டு, இந்த பள்ளியில் படித்த மாணவர்களும், ஆசிரியர்களும் சந்திக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வழக்கறிஞர் எம்.ஜெயபாலன், கீழ் பென்னாத்தூர் பிரசாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கெண்டனர். இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் சங்கம் உருவாக்கி, மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: