காஞ்சிபுரம்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் பெருநகரக் குழு 24வது மாநாடு ஞாயிறன்று (செப். 9) கே.எஸ்.பி இல்லத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு நகரத் தலைவர் எஸ்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தம்மன் துவக்கவுரையாற்றினார். நகரச் செயலாளர் இ.சங்கர் வேலை அறிக்கை வாசித்தார். தமுஎகச காஞ்சி நகரச் செயலாளர் கு.ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் கே.புருஷோத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலக்குழு உறுப்பினர் ம.பா.நந்தன் சிறப்புரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள்
11 பேர் கொண்ட நகரக் குழுவிற்கு தலைவராக இ.சங்கர், செயலாளராக கே.யுவராஜ், பொருளாளர் எம்.சூர்யபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காஞ்சிபுரத்தின் 51 வார்டுகளுக்கும் பாலாற்றுக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், இரவு நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாககூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும், செவிலிமேடு, ஓரிக்கை, தேனம்பாக்கம், நத்தப்பேட்டை பகுதிகளுக்குபாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.