ஈரோடு,
ஈரோட்டில் அரசு பள்ளி மாணவிகளின் பிற்படுத்தப்பட்டோர் விடுதிக்கு அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு ஒடக்காடு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பலர் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு எதிரே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடை நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள், அப்பகுதியில் குடியிருக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்குள்ளாக நேரிடும். ஆகவே, இப்பகுதியில் மீண்டும் மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவதுடன், பள்ளி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாறாக, மதுபான கடைஅமைக்கப்பட்டதால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனக்கூறி திங்களன்று ஒடக்காடு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: