புதுதில்லி :

ஓட்டுநர் உரிமம், திருமணச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட 40 அரசு சேவைகளை மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் புதிய திட்டத்தை டெல்லி அரசு இன்று தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்காக தனியாக ஒரு நிறுவனமும், வாடிக்கையாளர் சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. திருமணச்சான்றிதழ், ஓட்டுநர் ஊரிமம், பெயர் மற்றும் முகவரி மாற்றம் என திட்டத்தில் உள்ள சேவையை மக்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தெரிவிக்கும்பட்சத்தில், சேவைமைய அதிகாரி வீட்டிற்கே வந்து தேவைப்படும் ஆவணங்களை பெற்றுச் சென்று பின்பு உரிய சான்றிதழை மக்களுக்கு திரும்ப அளிப்பார்கள். இதற்கு கூடுதலாக வெறும் 50 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரும் அரசின் சேவைகளை பெற மக்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. மேலும், ஓட்டுநர் உரிமம் பெறுபவர் மட்டும் குறிப்பிட்ட தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று வாகன ஓட்டும் தேர்வை மட்டும் கிளியர் செய்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கூறுகையில், இந்த திட்டம் அரசு நிர்வாகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பயனடைவர். ஊழல்,கையூட்டிற்கு விழும் பெரும் இடி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.