தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்து வரும் ஊழல்களை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார். அமைச்சர் வேலுமணியின் பினாமி ஒப்பந்தகாரரான சந்திரபிரகாஷ் நேரடியாக பத்திரிகையாளருக்கு மெசேஜ் மூலம் தரகுறைவான வார்த்தைகளில் திட்டியதோடு, மிரட்டலும் விடுத்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி அவர் சாந்திருக்கும் துறைகளின் அனைத்து வேலைக்கான ஒப்பந்தங்களையும் பெரும்பகுதி அவரது உறவினர் மற்றும் பினாமிகளுக்கே வழங்கி வந்தார். மற்றவர்களின் ஒப்பந்த விண்ணங்களை ஏற்க கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இதுகுறித்து ஏற்கனவே தீக்கதிர் நாளிதழ் விரிவான செய்திகளை வெளியிட்டிருந்து. அதே போல் கோவையின் குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு அளித்திருப்பதிலும், பெரிய அளவில் ஊழல் நடத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதே போல் தற்போது ஆங்கில ஊடகங்களில் அமைச்சர் வேலுமணி எப்படியெல்லாம் பினாமி பெயரில் ஒப்பந்தம் எடுத்து எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என்ற விபரங்கள் வெளியாகி வருகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த எஸ்.பி.வேலுமணி செய்தி வெளியிடும் பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்க போவதாக கூறி மிரட்டி பார்த்தார். ஆனால் எந்த வழக்கும் இதுவரை தொடுக்கவில்லை. இந்நிலையில் அவரது பினாமியான ஒப்பந்தராகாரர் சந்திரபிரகாஸ் டைம்ஸ்ஆப் இந்தியா பத்திரிகையின் பெண் செய்தியாளர் கோமல் கவுதம் என்பவரின் வாட்ஸ் அப்புக்கு பெண் என்றும் பாராமல் அவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி மேசேஸ் அனுப்பியிருந்தார். மேலும் இதனை மறைப்பதற்காக அவரின் தூண்டுதலின் பேரில் ஊழல் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை பிரஸ் கிளப் நிர்வாகிகளும் எங்களுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெண் பத்திரிகையாளரை அநகரீகமாக பேசி மிரட்டும் அமைச்சரின் பினாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். கோவை பிரஸ் கிளப் சார்பிலும் பத்திரிகையாளர்களை மிரட்டும் அமைச்சரின் பினாமிகள் மற்றும் அவரது அடியாட்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட கோவை காவல் ஆணையர் பெரியய்யா உரிய நடடிவக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.