நியூயார்க் நகரில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

திங்களன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் டெல்போர்ட்டோ வை எதிர்கொண்டார். அதிரடி ஆட்டத்
தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.இரண்டாவது செட்டில் சற்று  சுதாரித்து விளையாடிய டெல்போர்ட்டோ அந்த செட்டை கைப்
பற்ற கடுமையாக போராடினார்.ஆனால் டெல்போர்ட்டோவின் போராட்டம் இறுதிக்கட்டத்தில் பலனளிக்க வில்லை. இரண்டாவது செட்டை ஜோகோவிச் 7-6(7-4) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.தொடர்ந்து வேகம் காட்டிய ஜோகோவிச் மூன்றாவது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி, 6-3,7-6(7-4),6-3 என்ற செட் கணக்கில் டெல்போர்ட்டோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

14-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றிருக்கும் ஜோகோவிச்,அமெரிக்காவின் சாம்ப்ராஷ் (14 பட்டம்) சாதனையை சமன் செய்தார். சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு கோப்பையுடன் 27 கோடி ரூபாய் பரிசுத்தொகையும், போராடி தோல்வியடைந்த டெல்போர்ட்டோவுக்கு கோப்பையுடன் 13 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

மற்ற பிரிவுகளில் பட்டம் வென்றவர்கள்

மகளிர் ஒற்றையர் : ஒசாகா (ஜப்பான்) – பரிசுத்தொகை – 27 கோடி

ஆடவர் இரட்டையர் :மைக் பிரையன் – ஜாக் ஷாக் (அமெரிக்கா) பரிசுத்தொகை – 5 கோடி

மகளிர் இரட்டையர் :பார்ட்டி (ஆஸி.) – வான்டேவேக்ஹே (அமெ.) பரிசுத்தொகை – 5 கோடி

கலப்பு இரட்டையர் : மாட்டெக் (அமெ.) – முர்ரே (இங்கிலாந்து) பரிசுத்தொகை – 1 கோடி

Leave a Reply

You must be logged in to post a comment.