தீக்கதிர்

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர்,
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திங்களன்று முதலாவது மண்டல அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி முதலாவது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்திட வேண்டும். சாக்கடைகளை தூர்வாரி நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மருந்துகளை தெளிக்க வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும். மேலும், உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று முதலாவது மண்டல அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், விஜயா மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.