சென்னை :

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.9) 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதிவரை நடைபெறும். அதற்கு ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா?, சரியாக உள்ளதா? என்பது போன்ற விவரங்களை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் 9 ஆம் தேதி மற்றும் வருகிற 23- ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

இந்த முகாமில் வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடையக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் தற்போது 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகள் உள்ளன. சிறப்பு முகாம்களை இந்த வாக்குச்சாவடிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைப்போல் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

அனைத்து வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பெயர் சேர்க்க மற்றும் பெயர் நீக்க படிவங்கள் பெற்றுக் கொண்டு, உடனே பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர். மேலும் அந்த படிவங்களை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.