சென்னை,
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதர வாக அறிக்கை தாக்கல் செய்துள்ள மத்திய நீர்வளத்துறையின் நடவடி க்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது தொடர்பான வழக்கு கள் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றத்திலும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நீர்வளத்துறை, தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் மாசு பாதிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் என கூற முடியாது என்று ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஏற்கனவே, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி, அப்பகுதியில் மோசமான நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச் சூழல்மாசுபட்டுள்ளது என்ற ஆய்வறிக்கை யின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்நிலை யில் தமிழக அரசுக்கோ, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கோ சம்பந்தமில்லாமல் மத்திய அரசின் நீர்வளத்துறை ஆய்வு நடத்தியதாக கூறுவது ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதே தவிர வேறல்ல. ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ள நிலையில் மத்திய அரசு முந்திக் கொண்டு இவ்வாறு ஆய்வு செய்தது பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல்பாட்டுக்கு விரோதமானதாகும். மத்திய அரசின் இந்த போக்கு தூத்துக்குடி பகுதியில் மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.

எனவே, உடனடியாக மத்திய அரசு இந்த ஆய்வறிக்கையினை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசின் தவறான நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.