மேட்டுப்பாளையம்,
வனப்பாதை வழியே செல்லும் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தி இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கையை நேசிக்கும் மாணவர்கள் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் வழியே நீலகிரி செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பிரியும் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள் வழியே உதகையை சென்றடையலாம் என்பதால் நாடு முழுவதில்இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் இதன் வழியே பயணிக்கின்னர்.

இம்மலைப்பாதைகள் இருபுறமும் அடர்ந்த வனத்தின் வழியே செல்வதால் சுற்றுலா செல்லும் சிலர் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், மது பாட்டில்கள் போன்றவற்றை பயணத்தின் போது வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் வனச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகள் இவற்றை உண்பதால் உயிரழந்து வருகின்றன. வீசப்படும் மது பாட்டில்கள் வனத்திற்குள் உடைந்து சிதறிக்கிடப்பதால் இதனை மிதிக்கும் யானைகளின் கால்களில் கண்ணாடி சிதறல் குத்தி அவற்றின் இறப்பிற்கும் காரணமாகின்றன.இதனையடுத்து ஞாயிறன்று நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிமாணவ, மாணவிகள் மற்றும் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இணைந்து இயற்கையை நேசிப்போம் என்ற பெயரில் வனத்தின் வழியே செல்லும் சாலையோரத்தில் மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை அப்புறப்படுத்தினர். வனத்தையும் அதில் வாழும் உயிரினங்களையும் காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் காட்டை சுத்தப்படுத்தும் நோக்கிலும் இப்பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த தன்னார்வலர்கள் இதனை இப்பகுதியை கடக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

இதுகுறித்து பேசிய மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனத்துறை சார்பில்மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் மதுப்பாட்டில்கள் போன்றவற்றை வனம் சார்ந்த பகுதிகளில்வீசக்கூடாது என வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளிடம் நோடீஸ் விநியோகம் செய்யப்படுகிறது, மேலும் இதனை மீறுவோர்மீது வனச்சட்டபடி அபராதமும் விதிக்கபடுகிறது. ஆனாலும் சிலர் இச்செயல்களை தொடர்கின்றனர். வனம் பாழாவதற்கும் வனவிலங்குகள் இறப்பதற்கும் காரணமாகும் இது போன்ற நடவடிக்கைகள் இனி வரும் காலங்களில் தடுக்கதீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வனத்துறையினர் மாணவ, மாணவிகளோடு இணைந்து வனக்கழிவுகளை நீக்குவது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் இளைய தலைமுறையினருக்கு இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இருந்தாலும், கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வீசி எறிந்தமது பாட்டில்களை தேடிதேடி எடுத்து வருவது வேதனைக்குள்ளாக்குகின்றது என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், இதனை தவிர்க்கவாவது இனியாரும் இது போன்ற கழிவுகளை வீசும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.