உடுமலை,
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை ஒன்றியக்குழு சார்பில் சனியன்று பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்திற்கு ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ் தலைமை வகித்தார். இதில், மத்திய மோடி அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த தவறிவிட்டது. மேலும், தவறான பொருளாதார கொள்கையால் மக்களின் வாழ்க்கை
தரம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய தமிழக அரசு மத்திய அரசின் ஏவலாளியாக உள்ளது. மேலும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுகின்றனர். இதை கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டன. பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மூக்கோணம் பகுதியில் தொடக்கி பூலாங்கிணறு, ரயில் கேட் பகுதி, ஆா். வேலூர், ராகல்பாவி, சுண்டாக்காம்பாளையம், வாளவாடி, தீபாலபட்டி, எாிசனம்பட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றதுஇதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், ஜெகதீசன், ரங்கராஜ், பரமசிவம், வாலிபர் சங்க செயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

அனைத்து கட்சி
இதேபோல், உடுமலையில்அனைத்து கட்சிகள் சார்பில் ஞாயிறன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியம், நகர செயலாளர் எஸ். ஆா். மதுசூதனன், காங்கிரஸ் கட்சி ஜெனர்தனன், முத்துகுமாரசாமி, மதிமுக நகரச் செயலாளர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்நகர செயலாளர் கே.எஸ்.ரணதேவ், வி.சௌந்தர்ராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.