நாமக்கல்,
நாடு முழுவதும் நடைபெற உள்ளபொது வேலைநிறுத்தம் வெற்றி பெறச்செய்வது என இடதுசாரிகள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ், திமுக கட்சிகளின் சார்பில் செப். 10 ஆம்தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை நாமக்கல் மாவட்டத்தில் வெற்றி பெறச்செய்வது தொடர்பான அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திமுக கட்சியின் கிழக்கு வட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நவித் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் காந்திச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தம்பி ராஜா, மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கும் வகையில் வணிகர்கள், பேருந்து, லாரி உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு கோருவது மற்றும் வேலைநிறுத்தத்தை விளக்கி பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.