திருப்பூர்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர்ந்துள்ளது. மேலும்,திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பனியன் தொழில்கள் முற்றிலுமாக முடங்கும் அபாயமும் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் சண்முக பாண்டி மணி, கார்த்திக்ராஜா, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: