பெட்ரோல் – டீசல் – கேஸ் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில்
தமிழகம் முழுவதும் நாளை பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியுள்ளார். அதில் ஆவர் கூறுகையில்

மோடி அரசு கடைபிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் நாளை (10.09.2018) நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மறியல் இயக்கம் நடைபெறவுள்ளது.

நாளை (10.09.2018) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணாசாலை , தாராபூர் டவர் அருகில் நடைபெறும் மறியல் இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், சிபிஐ(எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், எஸ்யுசி(ஐ) சார்பில் ஏ.ரங்கசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை (10.09.2018) நடைபெறும் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துப்பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டுமெனவும், கட்சி அணிகள் முழுவதும் பங்கேற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: