சென்னை :

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: