திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.

டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு 2018 – 19 ஆம் கல்வியாண்டிற்கான நல்லாசிரியர் விருது கடந்த 5ம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில்வழங்கப்பட்டது. விருது பெற்ற 11 நல்லாசிரியர்களுக்கும் திருப்பூர் மாவட்டத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க.பழனிச்சாமி, கே.எஸ்.சி அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ராசா உள்ளிட்டோர் ஆவார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இவர்கள், அவரவர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பேற்றதிலிருந்து மாணவர், ஆசிரியர் நலன் காப்பதில் முதன்மை பெற்று விளங்கினர்.

மேலும், ஆசிரியர்களோடு இணைந்து பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பள்ளியைத் தூய்மையுடன் பராமரித்து கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் தகுந்த சூழலை உருவாக்கித் தந்துள்ள பாங்கு மிக மிகச் சிறப்பானதாகும். இதற்காக திருப்பூர் மாவட்டத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக இரு தலைமையாசிரியர்களைக் கெளரவிக்கும் பொருட்டு பொன்னாடை போர்த்திப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்
தொகுப்பு பரிசாக அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.