திருப்பூர்,
தமிழ்ப் பண்பாட்டு மையம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து குழந்தை வளர்ப்பு பயிற்சி முகாம் ஞாயிறன்று நடத்தப்பட்டது. திருப்பூர் அரிமா சங்கத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமினை தனியார் நிறுவன இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் சிவக்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியினை தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் ஒருங்கிணைத்தார்.  இதில், மோகன் குமார் கலந்து கொண்டு குழந்தை வளர்ப்பு பயிற்சி வழங்கினார். இந்த பயிற்சியில் பெற்றோர்களுக்கு நேர்மறை சிந்தனையுடன் குழந்தைகளை வளர்த்தல் மற்றும் குழந்தைகளின் சின்னச் சின்ன செயல்களை கூட பாராட்டுதல் வேண்டும் என்றார். இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பண்பாட்டு மைய நிர்வாகிகள் சுரேஷ், ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: