புதுதில்லி,
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இரண்டாவது உலக இந்து மாநாடு நடைபெற்றது. செப்டம்பர்7 அன்று இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், இந்துக்களுக்குஅடக்குமுறை எண்ணம் இல்லை. எங்களின் செல்வாக்குக்கு வெற்றியோ அல்லது குடியேற்றமோ காரணம் அல்ல. இந்து சமூகம் ஒரு குழுவாக இணைந்து செயல்படும்போதுதான் அது செழிப்படைய முடியும். சிங்கம் தனியாக இருந்தால் காட்டு நாய்கள் சேர்ந்து அதை அழித்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று கூறினார். அவரது இந்தப்பேச்சுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி கூறுகையில், நாய்கள் என்று கூறுவதன் மூலம் மற்ற மக்களைஆர்எஸ்எஸ் தாழ்த்தப் பார்க்கிறது. தங்களை வேங்கைகள் என்றும் கருதிக்கொள்கிறார்கள் என்றார். டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், எதிர்க்கட்சிகளைத்தான் நாய்கள் என மோகன் பகவத் கூறியுள்ளார் என்று குற்றம்சாட்டினார்.மோகன் பகவத்தின் இந்த மனநிலையைக் கண்டிக்கிறேன். கட்சிகள் ஆட்சிக்கு வரும்; போகும். ஆனால், அவரது இந்த மனநிலை, எதிர்க்கட்சிகள் தங்களை எதிர்த்துப் போராட முடியாது என்பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.எந்த மதத்தையும் இவ்வாறு குறிப்பிடுவது தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சவாந்த் கூறியுள்ளார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், இந்துக்களுக்கு எதிரானது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம். சாதி அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.