தீக்கதிர்

கல்வி நிறுவனங்களில் ஆசிரியைகள், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அகில இந்திய பெண் ஆசிரியர் மாநாட்டில் வலியுறுத்தல்

நாகர்கோவில்,
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் பெண் ஆசிரியர் மாநாடு செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கன்னியா குமரியில் நடைபெற்றது.  மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ஜனநாயக மாதர் சங்க செயலாளர் தபஸ்வி கருத்துரை வழங்கினார். பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சம்யுக்தா தொகுப்புரை வழங்கினார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. தலைவராக சம்யுக்தா, ஒருங்கி ணைப்பாளராக ஸ்ரீதேவி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக சாரு லதா, அருணா குமாரி, மஞ்சுளா, மணிமேகலை, சீமா தத்தா உட்பட 40 பேர் கொண்ட மத்தியக் குழு தேர்வுசெய்யப்பட்டது. துணை ஒருங் கிணைப்பாளர் சீமா தத்தா நன்றி கூறினார்.

முன்னதாக சனிக்கிழமையன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பொது மாநாட்டுக்கு, சம்யுக்தா தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.மணிமேகலை வரவேற்றார். மாதர் சங்கதுணைத்தலைவர் உ.வாசுகி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் கே.ராஜேந்திரன், துணை பொதுச் செயலாளர் கே.சி.ஹரி கிருஷ்ணன், பொருளாளர் பிரகாஷ் மோகன்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சாருலதா நன்றி கூறினார். முன்னதாக ஆயிரக்கணக்கான பெண் ஆசிரி யர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. மாநாட்டில், அனைத்து துறை களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன் முறைகளை தடுத்து பெண்களுக்கு பாதுகாப்பான சமூகச் சூழலை அரசு உருவாக்க வேண்டும்; அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அமல்படுத்தி, ஏழை மாணவர்கள், பெண் குழந்தைகளை கல்வி கற்கும் தடைகளை அகற்ற அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்; கல்விநிறுவனங்களில் பெண் ஆசிரி யர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பெண்ஆசிரியர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் கமிட்டி உருவாக்கவேண்டும், தமிழகத்தில் அரசு பள்ளிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

(ந.நி)