கல்வித்துறை தனியார்மய மாக்கப்படுமானால் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழல் உருவாகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு பின்பற்றி வரும் மனு தர்மம், சூத்திரர் கள் கல்விக் கற்கக்கூடாது; ஆயுதம் வைத்திருக்கக் கூடாது; செல்வம் சேர்க்கக் கூடாது; அதுபோன்று பெண்கள் எந்த உயர் சாதியில் பிறந்தாலும் அவர்கள் சூத்திரர்களே எனக் கூறுகிறது. இது இயல்பாக வந்த விஷயமல்ல. பெண்கள் காலந்தோறும் ஆண்களுக்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இதை அன்று ஏராளமான சீர்திருத்தவாதிகள், முற்போக்காளர்களின் கடுமையான போராட்டத்துக்கு பின்னரே மாற்ற முடிந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறை இன்று அதிகரித்து வருகிறது. 15 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன. அரசியல் சுதந்திரத்தை ஆண் அனுபவிக்க முடிகிறது. பெண் அனுபவிக்க முடியாத நிலைதான் உள்ளது. பெண்கள் வெளியில் சென்றால் பாதுகாப்பில்லை. வீட்டிற்குள் வந்தாலும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையும் இன்று அதிகரித்து வருகிறது. அப்படியென்றால் எந்த இடம்பெண்களுக்கு பாதுகாப்பான இடம்? இம்என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற நிலை பிரிட்டிஷ் காலத்தில் மட்டுமல்ல. பெண்களைப் பொறுத்த வரை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்காகத்தான் என ஆட்சி யாளர்கள் கூறுகிறார்கள். பெட்ரோல், டீசல் வரியிலிருந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்கிறார்கள். உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அப்படியென்றால் மற்ற நாடு களை ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறையற்றவர்களா? 1857 சிப்பாய்க் கலகம் என்று கூறப்படும் முதலாம் இந்திய விடுதலைப்போர் துவங்கி இந்திய சுதந்திரத்தோடு தொடர்புடைய செங்கோட்டையை தனியாருக்கு குத்தகைவிட்ட இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டில் எதைத்தான் குத்த கைக்கு விடமாட்டார்கள். ஆசிரியர்கள் தங்களுக்காக போராடியது போதாது. நம் போராட்டம் விரிவடைய வேண்டும். தொழிலாளர்களுக்காக, விவசாயி களுக்காக, தொழிலாளருக்கு விரோதமான தொழிலாளர் நலச்சட்டங்களை எதிர்த்து, மாட்டு அரசியலை எதிர்த்து, இந்த ஆடை அணியக்கூடாது, அந்த ஆடை அணியக்கூடாது என்ற கலாச்சார அரசியலை எதிர்த்து நாம் போராட வேண்டும். இன்று அநீதியை தட்டிக் கேட்டால் கொல்லப்படும் சூழல் நிலவுகிறது. இதை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். சாதி, மதம் என்ற தடைகளை உடைத்துயார் தடுத்தாலும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.