===க.சுவாமிநாதன்===
ஓராண்டில் ரூபாய் மதிப்பு 11 சதவீதம் சரிந்திருக்கிறது. செட்பம்பர் 6 அன்று டாலருக்கு ரூபாய் மதி;பபு 72 ஐ தொட்டுவிட்டது. இதன் விளைவுகள் அடுப்படி முதல் அந்நிய தேசக்கடன் வரை நீள்கிறது.

எண்ணெய் விலை ஏற்றம்!
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொற்று நோய் போல இந்தியப் பொருளாதாரத்தின் எல்லா அம்சங்கள் மீதும் தனது தாக்கத்தைப் பரப்பி வருகிறது. குறிப்பாக இறக்குமதி விலைகள் அதிகரித்துள்ளன. ஒருடாலர் பெறுமான சரக்கை ஓராண்டுக்கு முன்பாக இறக்குமதி செய்வதானால் ரூ.64.80 ஐ இந்தியா தந்தது எனில் இப்போது ரூ.72,000ஐ செலுத்த வேண்டியுள்ளது, சாதாரணமாக ரூ.7.20 தானே வித்தியாசம் எனச் சிலர் நினைக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான டாலர் புழங்குகிற அந்நிய வர்த்தகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்களாக இந்த வித்தியாசம் விரிவடைகிறது என்பது தான் உண்மை.

இந்திய இறக்குமதியில் மிகப்பெரிய பங்கை வகிப்பத கச்சா எண்ணெய் ஆகும். 2017ல் 70 பில்லியன் டாலர்கள், 2017ல் 88பில்லியன் டாலர்கள் என ஆண்டுக்கு ஆண்டு எண்ணெய் இறக்குமதி அதிகரித்தும் வருகிறது. 2019ல் இது 114 பில்லியன் டாலர்களாக அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது, 114 பில்லியன் டாலர்களை இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பிற்கு மாற்றிப் பாருங்கள்! 114 பில்லியன் டாலர்கள் என்றால் 11400 கோடி டாலர்கள். டாலருக்கு ரூ.72 மதிப்பு எனில் மொத்தம் 8,20,800 கோடிகள். இவ்வளவு தொகை புழங்கும் எண்ணெய் இறக்குமதியில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கம் எவ்வளவு இருக்குமென்று கணக்குப் போட்டால் தலை சுற்றுகிறது.

ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌம்ய காந்தி கோஷ் ஒரு கணக்கைப் போட்டுள்ளார். இவ்வாண்டு ரூபாய் மதிப்பு சராசரியாக ரூ.73 என நீடித்தால் 2018ல் மீதமுள்ள மாதங்களில் மட்டும் இந்தியாவின் எண்ணெய் பில் ரூ.45,700 கோடிகள் அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்.

தொற்று நோய் என்று ஏன் கூறுகிறோம் தெரியுமா! எண்ணெய் விலைகள் கூடுகிறதென்றால் அதன் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. மனிதனின் அன்றாடத் தேவை முதுல் ஆகாய விமானம் வரை இதன் பயன்பாடகள் விரிவடைகின்றன. ஒவ்வொராண்டும் எண்ணெய் தேவை உயர்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் அதிகரிக்கின்றன. இவ்வளவு அதிகமான இறக்குமதிகள் மேலும் கூடுதலான அழுத்தத்தை ரூபாய் மீது ஏற்படுத்தி அதுவும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது.

அந்நியக் கடனும் அதிகமாகும்
சௌம்ய காந்தி கோஷ் போட்டக் காண்பிக்கிற அந்நியக் கடன் அதிகரிப்போ நமக்கு மயக்கத்தையே வரவழைக்கிறது. குறுகிய காலக் கடன்களின் மதிப்பு மட்டுமே ரூ.68,500 கோடிகள் அளவிற்கு அதிகரிக்கிறது என்கிறார் அவர்.

குறுகிய காலக் கடன்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்புகளம், நிறுவனங்களின் வெளிநாட்டுக் கடன்களும் அடங்கும். 2017ல் இக்கடன்களின் மொத்த மதிப்பு = 217.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. இத்தொகையில் 2018 முதல் பாதியில் 50 சதவீதம் திரும்பச் செலுத்தப்பட்டிருக்கலாம். மீதமுள்ள 6 மாதங்களில் செலுத்தப்பட வேண்டிய தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 7.1 லட்சம் கோடிகள். 2017ல் டாலருக்கு சராசரியாக ரூபாய் மதிப்பு 65.1 ஆக இருந்ததன்அடிப்படையிலான மதிப்பீடு இது. தற்போது டாலருக்கு ரூபாய் மதிப்பு ரூ.72 வரை உயர்ந்து விட்டது.

இதன் அடிப்படையில் கணக்குப் பார்த்தால் கடன் மதிப்பு 7.8 லட்சம் கோடி ரூபாய்களாக உயர்ந்துவிட்டது. வித்தியாசம் தான் சற்றேறக் குறைய 70,000 கோடிகள்.

ஆகாயத்தையும் தொடுகிறது
இது எகானாமிக் டைம்ஸ் ஜூலை 11, 2018 அன்று விமான நிறுவனங்கள் பற்றி செய்த எச்சரிக்கை. ஜூன் வரையிலான காலாண்டில் பட்டியலிடப்பட்ட விமான நிறுவனங்களின் பயண விகித வளர்ச்சியில் 18 சதவீத சரிவு ஏற்படுமெனக் கணிக்கப்பட்டது. காரணம், விமான எரிவாயு விலைகளின் உயர்வும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுமே ஆகும்.
ஸ்பைஸ் ஜெட், இன்டர் குளோப் ஏவியேசன், ஜெட் ஏர்வேஸ் ஆகிய முக்கிய மூன்று விமான நிறுவனங்களையும் சேர்த்து வருமானத்தில் 15=20 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டாலும் நிகர லாபத்தில் 70-75 சதவீத வீழ்ச்சியும் ஏற்படுமென்பதே கணிப்பு.

ஸ்பைஸ் ஜெட் ஓரளவு தப்பிக்கிறதாம். காரணம் அதன் விமான வழிகள் அதிகம் பயணிகளைக் கொண்டதாகவும், ஆதிக்க கட்டணங்கள் உடையதாகவும் இருப்பதுதான். இதை மதிப்பிடுவதற்கு … கிலோ மீட்டருக்கான வருமானம் (சுஞமு – சுநஎநரேந ஞநச முiடிஅநவநச) என்ற அளவுகோலை பயன்படத்துகிறார்கள். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் லோடு அளவு மே மாதம் 95 சதவீதம், இன்டிகோ 91.5 சதவீதம், ஜெட் ஏர்வேஸ் 81 சதவீதம், இதுவே ஸ்பைஸ் ஜெட்டின் ஆர்.பி.கே. விகிதம் அதிகம் இருப்பதற்கு காரணம். எனினும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விமான நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

கல்விக்கடன்
வெளிநாடுகளில் போய்ப் படிப்பதற்கான கல்விக்கடன் வாங்கியவர்களின் பாடுதான் திண்டாட்டம். ஓராண்டுக்கு முன்பு 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 46153 டாலர்கள் கிடைக்கும். இப்போது அதே 30 லட்சம் ரூபாய்க்க 41666 டாலர்கள் தான் கிடைக்கும். ஒரே ஆண்டில் விழுந்துள்ள பள்ளம் 4487 டாலர்கள். அதை இந்திய ரூபாய்க்கு மாற்றுங்கள். ரூ.3,23, 064 ஐ அதிகமாக கடன் வாங்கினால்தான் அமெரிக்காவில் யூகிக்க முடியும். இந்திய ரூபாய் மதிப்பு கனடா டாலருக்கு எதிராக இரண்டே மாதத்தில் ரூ.4 சரிந்துள்ளது. ரூ.50 லிருந்து ரூ.54 ஆக செலாவணி மாற்று விகிதம் உயர்ந்துள்ளது.
நடுத்தர வர்க்க குடும்பங்களின் பட்ஜெட்டுகளில் விழுகிற பெரிய பள்ளங்கள் இவை.

சாமானிய மனிதனின் முதுகுகளில்…
ஏதோ ஆகாய பயணம், அந்நியக் கல்வி போன்ற உயர் நடுத்தர வர்க்கத்தை மட்டுமே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பாதிக்குமென்பதில்லை. பெட்ரோலிய விலைகள் எல்லோரையும் பாதிக்கக்கூடியது. ஆனால் பெட்ரோலிய விலை உயர்வுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தாண்டி, மத்திய, மாநில அரசின் வரிகள், இறக்குமதி விலை அதிகரிப்பின் மீதும் அக்கூடுதல் வரிகள் ஆகியனவும் காரணங்களாக உள்ளன.

இதுதவிர இறக்குமதி பட்டியலில் உள்ள உரம், மருந்துகள், இரும்பு ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கின்றன. பாமாயில், சோப், வாசனைப் பொருட்கள், ஷாம்பு போன்ற பொருட்களின் விலைகளும் உயர்கின்றன.

சில நிறுவனங்கள் போட்டிக்காக பயந்து விலைகளைக் குறைக்க முடியாவிட்டால் அவர்கள் கைவைப்பது அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மீதுதான். செலவினக்குறைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் ஆள் குறைப்பிற்கு போவார்கள்.

“நாய்க்கு எங்கு கல்லடிபட்டாலும் அது காலைத்தான் முதலில மடக்கிக் கொள்ளும் என்பார்கள்”
அதுபோலவே ரூபாயின் மதிப்பில் எப்போது அடி விழுந்தாலும் கடைசியில் காயப்படுவது சாதாரண, நடுத்தர மக்கள் தான்.

Leave a Reply

You must be logged in to post a comment.