மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் தலைமையில் வெள்ளியன்று வில்லாபுரம் தியாகி லீலாவதி அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் லூர்து ரூபி, தீக்கதிர் சந்தா தொகை ரூ. 2 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாயை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஜோதிராம், பி.ராதா, வீ.பிச்சை, கே.வசந்தன், இரா.தெய்வராஜ், அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், எம்.பாலசுப்பிரமணியம், அ.கோவிந்தராஜ், ஆர்.சசிகலா உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: