இஸ்லாமாபாத்:                                                                                                                                                                   தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்த போதிலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில்,பாகிஸ்தானின் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க உள்ளதாக டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.இதனால் அடுத்தாண்டு ஐபில் தொடரிலும் டிவில்லியர்ஸ் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடிக்குப் பெயர் பெற்ற டிவில்லியர்ஸை எதிரணியின் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றி பந்துவீசுவது லேசான காரியம் இல்லை.எந்தத் திசையில் பந்து கிடைத்தாலும் மைதானத்தில் நாலாபுறமும் பந்தை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டும் சிறப்பு திறன் படைத்தவர் டிவில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.